தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாடு தலைகுனியாது: 28ம் தேதி என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பயிற்சிக் கூட்டம்- துரைமுருகன் அறிவிப்பு

Published On 2025-10-18 13:54 IST   |   Update On 2025-10-18 13:54:00 IST
  • மத்திய பாஜக அரசின் முன்பு "தமிழ்நாடு தலைகுனியாது" என்ற பரப்புரையை கழகம் தொடங்கவுள்ளது.
  • அதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழத்தின் வெற்றியை உறுதி செய்யும் பயிற்சிக் கூட்டம்.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளை அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திட்டமிடலின்படி வருகின்ற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை கழகம் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டை வளைத்திட முயற்சிக்கும் வஞ்சக சூழ்ச்சி கொண்ட மத்திய பாஜக அரசின் முன்பு "தமிழ்நாடு தலைகுனியாது" என்ற பரப்புரையை கழகம் தொடங்கவுள்ளது. அதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழத்தின் வெற்றியை உறுதி செய்யும் வகையில்,

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" என்ற முன்னெடுப்புக்காக கழக மாவட்ட செயலாளர்கள், மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழக செயலாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம் வரும் 28.10.2025 செவ்வாய்கிழமை, காலை 9.00 மணி அளவில் மாமல்லபுரம், ஈ.சி.ஆர். சாலையில் உள்ள "கான்ஃப்ளூயன்ஸ் ஹால்" (Confluence Hall)ல் நடைபெறும்.

இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News