தமிழ்நாடு செய்திகள்

கபாலீஸ்வரர் கலைக்கல்லூரி முன்பு எடப்பாடி பழனிசாமியை கண்டித்து மாணவர்கள் போராட்டம்

Published On 2025-07-09 14:44 IST   |   Update On 2025-07-09 14:44:00 IST
  • அறநிலையத்துறை மூலம் கோவிலுக்கு வரும் பணத்தை எடுத்து கல்லூரி கட்டப்பயன்படுத்துகிறார்கள்.
  • ஏன் அரசு பணத்தில் இருந்து கல்லூரி கட்ட வேண்டியது தானே.

கோவையில் நடைபெற்ற 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' பயணத்தின்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,

கோவிலை கண்டாலே தி.மு.க.வுக்கு கண்ணு உறுத்துகிறது. அதிலிருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து கல்லூரி கட்ட ஆரம்பிக்கிறார்கள். இது எப்படி நியாயம், தெய்வபக்தி படைத்த நீங்கள் எதற்காக கோவில் உண்டியலில் பணத்தை போடுகிறீர்கள், கோவிலை மேம்படுத்த தானே, ஆனால் அறநிலையத்துறை மூலம் கோவிலுக்கு வரும் பணத்தை எடுத்து கல்லூரி கட்டப்பயன்படுத்துகிறார்கள். ஏன் அரசு பணத்தில் இருந்து கல்லூரி கட்ட வேண்டியது தானே. அ.தி.மு.க. ஆட்சியில் அப்படித்தானே செய்தோம். இதை மக்கள் ஒரு சதிச்செயலாகத்தான் பார்க்கிறார்கள் என்று பேசி இருந்தார்.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து சென்னை கொளத்தூரில் உள்ள கபாலீஸ்வரர் கலைக்கல்லூரி முன்பு மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.

கோவில் வருமானத்தில் தி.மு.க. அரசு கல்லூரிகளைக் கட்டுவது நியாயமா என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News