கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தொடங்கியது தென்மேற்கு பருவமழை
- தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்னதாக இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது.
- மேற்கு தொடர்ச்சி மலை இருக்கும் குமரி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பொழியும் இருக்கும்.
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்னதாக இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்னதாக இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் பல மாவட்டங்களில் மழை பெய்யும். இது ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும். மேற்கு தொடர்ச்சி மலை இருக்கும் குமரி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பொழியும் இருக்கும்.
கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து தமிழ்நாட்டின் பல பகுதிகள் மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.