தமிழ்நாடு செய்திகள்

திருத்தணி அருகே நாளை சீமான் மரங்களோடு பேசுகிறார்

Published On 2025-08-29 11:24 IST   |   Update On 2025-08-29 11:24:00 IST
  • பனை மரத்தில் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை நடத்திய அவர் ஆடு மாடுகளின் மாநாட்டையும் நடத்தினார்.
  • மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சென்னை:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு, மாடுகள் வளர்ப்பு, இயற்கை விவசாயம் உள்ளிட்டவை பற்றி எப்போதுமே அக்கறையோடு பேசி வருபவர் ஆவார்.

அந்த வகையில் பனை மரத்தில் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை நடத்திய அவர் ஆடு மாடுகளின் மாநாட்டையும் நடத்தினார்.

இந்த நிலையில் திருத்தணி அருகே உள்ள அருங்குளம் கூட்டு சாலையில் சீமான் நாளை காலை 10 மணிக்கு மரங்களுடன் பேசுகிறார். அங்குள்ள மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.



'மரங்களோடு பேசுவோம், மக்களுக்காக பேசுவோம்' என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் சீமானுடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் திரளாக பங்கேற்கிறார்கள்.

இந்த மாநாட்டையொட்டி சீமான் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்று தோட்டத்தில் உள்ள மரங்களை முத்தமிட்டு மகிழ்ந்தார். அப்போது ஒரு மரத்தின் கிளையை பிடித்த படி என்ன... உனக்கு தண்ணி ஊற்றினார்களா? சாப்பாடு போட்டார்களா? என்று கேட்டு பேசுவார். அந்த வீடியோக்களையும் நாம் தமிழர் கட்சியினர் வெளியிட்டுள்ளனர்.



Tags:    

Similar News