அதிமுக கூட்டணி வந்தால் துணை முதல்வர் ஆக்குகிறேன்: ஆதவ் அர்ஜூனா அழைத்ததாக சீமான் பேட்டி
- இந்த கேளிக்கை வரி யாருக்காக குறைக்கிறார்கள்?
- மின்கட்டணம், சொத்து வரியை எப்போது குறைப்பீர்கள்? என்றார்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா சமீபத்தில் பேசுகையில், எடப்பாடி பழனிசாமியை நம்பி அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க யாரும் வருவதுபோல் தெரியவில்லை என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி–னர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
புரணி பேசுவதற்கெல்லாம் கருத்து சொல்ல வேண்டுமா?
இதே ஆதவ் அர்ஜூனா தான் என்னை அ.தி.மு.க. கூட்டணிக்கு வாருங்கள் என்று அழைத்தார். துணை முதல்-அமைச்சர் ஆக்குகிறேன் என்றார். அதற்கு என்ன செய்வது? என பதிலளித்தார்.
இதேபோல், திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி குறைப்பு குறித்த கேள்விக்கு, 'அதனால் என்ன நன்மை திரைத்துறைக்கு நடக்கும். ஒரே ஒரு நிறுவனம், குடும்பம்தான் மொத்த படத்தையும் வாங்கி வினியோகம் செய்கிறது. அவர்கள் நினைக்கும் படம்தான் வெளியாகும். அந்தவகையில் இந்த கேளிக்கை வரி யாருக்காக குறைக்கிறார்கள். மின்கட்டணம், சொத்து வரியை எப்போது குறைப்பீர்கள்? அதற்கு பதில் இருக்கிறதா?' என சீமான் பதிலளித்தார்.