தமிழ்நாடு செய்திகள்

கவனத்துடன் பேச வேண்டும்... விஜய் அரசியலில் வளரவில்லை- சரத்குமார்

Published On 2025-08-22 12:04 IST   |   Update On 2025-08-22 12:04:00 IST
  • நாமும் பா.ஜ.க.வுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எதற்கு கூட்டணி வைக்க வேண்டும்.
  • எதை பேசுகிறோம், யாரைப்பற்றி பேசுகிறோம், எதற்காக பேசுகிறோம் என்று கவனத்துடன் பேச வேண்டும்.

மதுரையில் த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு நேற்று நடந்தது. திரளான தொண்டர்கள் பங்கேற்ற மாநாட்டில் கட்சி தலைவர் விஜய் பேசும்போது, நாமும் பா.ஜ.க.வுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எதற்கு கூட்டணி வைக்க வேண்டும்?. அவர்களுடன் கூட்டணி வைக்க நம்ம என்ன மிகப்பெரிய ஊழல் கட்சியா?.

ஒரு பக்கம் ஆர்.எஸ்.எஸ். இடம் அடிபணிந்து கொண்டும், இன்னொரு பக்கம் மதச்சார்பற்ற கூட்டணி என்று மக்களை ஏமாற்றும் கூட்டணியாக நம் கூட்டணி இருக்காது என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் நெல்லையில் நடைபெற உள்ள பா.ஜ.க. பூத் கமிட்டி மண்டல மாநாட்டில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த சரத்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு நடிகர் விஜய் அரசியலில் வளரவில்லை.

* எதை பேசுகிறோம், யாரைப்பற்றி பேசுகிறோம், எதற்காக பேசுகிறோம் என்று கவனத்துடன் பேச வேண்டும் என்று விஜய்க்கு அறிவுரை கூறினார்.

Tags:    

Similar News