தமிழ்நாடு செய்திகள்

தைலாபுரம் தோட்டத்திற்கு டாக்டர் ராமதாசை சந்திக்க சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி காரில் வந்தபோது எடுத்த படம்.

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசுடன் சைதை துரைசாமி சந்திப்பு- பா.ம.க. நிர்வாகிகளும் ஆலோசனை

Published On 2025-04-13 11:15 IST   |   Update On 2025-04-13 11:15:00 IST
  • நேற்று சுமார் இரவு 4 மணி நேரமாக டாக்டர் ராமதாசிடம் ஜி .கே. மணி ஆலோசனை மேற்கொண்டார்.
  • பா.ம.க. நிர்வாகிகள் டாக்டர் ராமதாசை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது, பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைராக நானே செயல்படுவேன். செயல் தலைவராக அன்புமணி செயல்படுவார் என பரபரப்பாக பேட்டியளித்தார்.

இந்த நிலையில் அவரை சமாதானம் படுத்துவதற்காக கடந்த 3 நாட்களாக பா.ம.க. முக்கிய நிர்வாகிகள், டாக்டர் ராமதாசின் மகள்கள் மற்றும் குடும்பத்தினர் டாக்டர் ராமதாசை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். நேற்று சுமார் இரவு 4 மணி நேரமாக டாக்டர் ராமதாசிடம் ஜி .கே. மணி ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த நிலையில் இன்று காலை தைலாபுரம் தோட்டத்திற்கு சென்னை முன்னாள் மேயரும், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகியான சைதை துரைசாமி, பா.ம.க. தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மயிலம் எம்.எல்.ஏ.சிவக் குமார், விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஜெயராஜ், மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் டாக்டர் ராமதாசை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் நிருபர்களை சந்தித்து தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News