தமிழ்நாடு செய்திகள்
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை
- கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்தனர்.
- கருக்கா வினோத்தின் வழக்கு என்.ஐ.ஏ., போலீசாருக்கு மாற்றப்பட்டது.
கடந்த 2023 ஆம் ஆண்டு பிரபல ரவுடி கருக்கா வினோத் கடந்த ஆண்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசினார்.
இந்த சம்பவத்தில் கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், ரவுடி கருக்கா வினோத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.