தமிழ்நாடு செய்திகள்
பொது மக்களுக்கு ஓர் நற்செய்தி..! ரேஷன் அரிசியை முன்கூட்டியே பெறலாம்- தமிழக அரசு அறிவிப்பு
- நவம்பர் மாத அரிசியை அக்டோபர் மாதத்திலேயே பெறலாம் என தெரிவித்துள்ளார்.
- முன்கூட்டியே அரிசி பெறாதவர்கள் வழக்கம்போல் நவம்பர் மாதத்தில் வாங்கிக் கொள்ளலாம்.
அரிசு குடும்ப அட்டைத்தாரர்கள் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை அக்டோபர் மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழைக் காலத்தில் மழை அதிகம் பெய்யலாம் என்பதைக் கருத்தில் கொண்டு நவம்பர் மாத அரிசியை அக்டோபர் மாதத்திலேயே பெறலாம் என தெரிவித்துள்ளார்.
அரிசியை முன்கூட்டியே அக்டோபரில் பெறாதவர்கள் வழக்கம்போல் நவம்பர் மாதத்தில் அரிசியை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளார்.