தமிழ்நாடு செய்திகள்

கரூரில் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கியது: ரஜினிகாந்த் வேதனை

Published On 2025-09-27 22:32 IST   |   Update On 2025-09-27 22:32:00 IST
  • கரூர் சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.
  • கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

சென்னை:

கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் இன்று பிரசாரம் செய்தார். விஜய் பேசி முடித்து புறப்பட்டபின், கூட்டம் கலைந்து செல்லும்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

கூட்ட நெரிசலில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் இதுவரை 31 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது.

இந்நிலையில், கரூர் சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது என நடிகர் ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள செய்தியில், கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News