தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. கூட்டணிக்கு அச்சாரமா?- முதலமைச்சரை சந்தித்து நலம் விசாரித்தார் பிரேமலதா

Published On 2025-07-31 11:06 IST   |   Update On 2025-07-31 11:06:00 IST
  • முதலமைச்சருக்கு ‘ஆஞ்சியோ’ சிகிச்சை அளிக்கப்பட்டது.
  • உடல் நலன் சீரானதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ந்தேதி ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 21-ந் தேதி காலை நடைபயிற்சியின்போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்பதால் அவரை ஆஸ்பத்திரியில் தங்கி இருக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர். அவருக்கு 'ஆஞ்சியோ' சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

உடல் நலன் சீரானதை தொடர்ந்து கடந்த 27-ந்தேதி அவர் ஆஸ்பத்திரியில் இருந்து 'டிஸ்சார்ஜ்' ஆனார்.

 

இந்த நிலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்தார். அவரது உடல்நலம் குறித்து அவர் விசாரித்தார். அவருடன் பொருளாளர் சுதீஷூம் முதலமைச்சரை சந்தித்து நலம் விசாரித்தார்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பிரேமலதா சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. தற்போது வரை எந்த கூட்டணியிலும் இணையாத பிரேமலதா தி.மு.க. கூட்டணிக்கு செல்வதற்கான அச்சாரம் தான் இந்த சந்திப்பா என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Tags:    

Similar News