தமிழ்நாடு செய்திகள்

மற்றவர்கள் பேசினால் கூட்டணி பேச்சுவார்த்தை, ஆனால் தே.மு.தி.க. பேசினால்... - பிரேமலதா

Published On 2026-02-03 12:20 IST   |   Update On 2026-02-03 12:20:00 IST
  • கூட்டணி குறித்து ஊடகங்கள் தேவையற்ற செய்திகளை வெளியிட வேண்டாம்.
  • தமிழகம், தேசிய அளவில் உள்ள அனைத்து கட்சிகளும் தே.மு.தி.க.விற்கு தோழமை கட்சிகள் தான்.

சென்னை விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* கூட்டணி குறித்து தே.மு.தி.க. தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அதுதான் இறுதியான அறிவிப்பு.

* கூட்டணி குறித்து ஊடகங்கள் தேவையற்ற செய்திகளை வெளியிட வேண்டாம்.

* வெகு விரைவில் அனைவரையும் அழைத்து நல்ல செய்தியை கூறுவோம்.

* இன்று கூட்டணி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

* இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என வெளியான செய்தியிலும் உண்மையில்லை.

* தமிழகம், தேசிய அளவில் உள்ள அனைத்து கட்சிகளும் தே.மு.தி.க.விற்கு தோழமை கட்சிகள் தான்.

* மற்றவர்கள் பேசினால் பேச்சுவார்த்தை, தே.மு.தி.க. பேசினால் தனிப்பெயரா?

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News