தமிழ்நாடு செய்திகள்

மத்திய பட்ஜெட் ஏமாற்றம்: பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள் - மு.க.ஸ்டாலின்

Published On 2026-02-03 11:16 IST   |   Update On 2026-02-03 11:16:00 IST
  • ரூ.11.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
  • மத்திய பட்ஜெட் தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

சென்னை கொளத்தூர் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரத்த சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.11.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையத்தையும் திறந்து வைத்தார்.

கொளத்தூர் தொகுதியில் கட்டப்பட்டுள்ள மறுவாழ்வு மையம், நியாய விலைக்கடைகளை அவர் திறந்து வைத்தார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்காதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த முதலமைச்சர், மத்திய பட்ஜெட் தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. வரும் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார்.

Tags:    

Similar News