தமிழ்நாடு செய்திகள்

கரூர் சம்பவம்: 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார்

Published On 2025-09-28 01:14 IST   |   Update On 2025-09-28 01:14:00 IST
  • கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.
  • கரூர் துயர சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உதவி எண்களை அறிவித்தார்.

சென்னை:

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கூட்ட நெரிசலில் நிகழ்ந்த உயிரிழப்பு தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.

கரூரில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் குறித்து தெரிந்து கொள்ள 04324-256306, 7010806322 ஆகிய உதவி எண்களை அந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், முதல் கட்டமாக போலீசார் கொலையாகாத மரணம், மரணம் விளைவிக்கும் செயல், பிறர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தற்போது மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News