தமிழ்நாடு செய்திகள்

கலைஞர் நினைவிடத்தில் தான் எழுதிய நூலை வைத்து மரியாதை செலுத்தினார் கவிஞர் வைரமுத்து

Published On 2025-07-13 13:54 IST   |   Update On 2025-07-13 13:54:00 IST
  • கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதி இருக்கிறார்.
  • வள்ளுவர் மறை வைரமுத்து உரை என்ற நூலை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடவுள்ளார்

கவிஞர் வைரமுத்து 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் திருக்குறளுக்கு உரை எழுதி இருக்கிறார். இந்த நூலை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடவுள்ளார்

இந்நிலையில், தன் பிறந்தநாளை ஒட்டி, தான் எழுதிய நூலை கலைஞர் நினைவிடத்தில் வைத்து கவிஞர் வைரமுத்து மரியாதை செலுத்தினார்.

இது தொடர்பான வீடியோவை வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில்,

முத்தமிழறிஞரே!

முதல் தமிழாசானே!

'வள்ளுவர் மறை

வைரமுத்து உரை' நூலை

உங்கள்

நினைவிடம் சேர்க்கிறேன்;

நெஞ்சு நிறைகிறேன்

அப்பாவின் சட்டையை

அணிந்துகொள்ள ஆசைப்படும்

குழந்தையைப்போல

நீங்கள் உரைஎழுதிய குறளுக்கு

நானும் எழுதியிருக்கிறேன்

உரையாசிரியர் பட்டியலில்

சேர்வதைவிட

உங்கள் வரிசையில் சேர்வதில்

உள்ளம் கசிகிறேன்

வணங்குகிறேன்;

என் பிறந்தநாளில்

வாழ்த்துங்கள் என்னை

என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News