தமிழ்நாடு செய்திகள்

பா.ம.க. கொறடா- சட்டப்பேரவை செயலாளருக்கு ராமதாஸ் தரப்பு கடிதம்

Published On 2025-07-04 15:59 IST   |   Update On 2025-07-04 15:59:00 IST
  • அன்புமணி ஆதரவாளர்களை ராமதாசும், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணியும் நீக்கி வருகின்றனர்.
  • சட்டமன்றக்குழு கொறடா அருளை மாற்றக்கோரி பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்தனர்.

பா.ம.க.வில் தந்தை மகனுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், நிர்வாகிகள் சிலர் ராமதாசுக்கு ஆதரவாகவும், சிலர் அன்புமணிக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.

இதனிடையே, மூச்சு உள்ளவரை பா.ம.க. தலைவர் தானே என ராமதாசும், வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் என்று அன்புமணியும் பேசி வருகிறார்கள்.

இதற்கிடையே, அன்புமணி ஆதரவாளர்களை ராமதாசும், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணியும் நீக்கி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம், சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருளை பா.ம.க.வில் இருந்து நீக்கி அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து, நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், எம்.எல்.ஏ. பதவியில் இருந்து யாரையும் நீக்க முடியாது. அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. எம்.எல்.ஏ.க்களை நீக்க பா.ம.க. கொறடா தான் சபாநாயகருக்கு பரிந்துரை செய்ய முடியும் என்று கூறியிருந்தார்.

பின்னர், சட்டமன்றக்குழு கொறடா அருளை மாற்றக்கோரி பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்தனர்.

இந்நிலையில், பாமக கொறடா எம்.எல்.ஏ. அருள் மாற்றம் என அன்புமணி தரப்பும், அருள் அப்பொறுப்பில் நீடிக்கிறார் என ராமதாஸ் தரப்பும் சட்டப்பேரவை செயலாளரிடம் அடுத்தடுத்து கடிதம் எழுதி வருகின்றனர்.

அந்த வகையில், பாமக கொறடா பொறுப்பில் எம்.எல்.ஏ. அருள் தொடர்ந்து நீடிப்பார் என சட்டப்பேரவை செயலாளருக்கு ராமதாஸ் தரப்பு கடிதம் எழுதியுள்ளார்.

Tags:    

Similar News