தமிழ்நாடு செய்திகள்
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் அன்புமணி ஆர்ப்பாட்டம்: பா.ம.க.வினர் பங்கேற்பு
- ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.
- ஆர்ப்பாட்டத்தையொட்டி விழுப்புரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
விழுப்புரம்:
உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 1200 நாட்கள் ஆகியும் வன்னியர் இடஒதுக்கீடு 10.5 சதவீதம் வழங்க மறுக்கும் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என டாக்டர் அன்புமணி அறிவித்திருந்தார்.
அதன் விழுப்புரம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள நகராட்சி மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு டாக்டர் அன்புமணி தலைமை தாங்கினார். இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தையொட்டி விழுப்புரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
பா.ம.க.வில் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வந்த நிலையில் அன்புமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.