தமிழ்நாடு செய்திகள்
பிளஸ்2 தேர்வில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி- மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி
- கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
- 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை:
தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெளியிட்டார்.
கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 94.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில் இந்த ஆண்டு 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 93.16 சதவீதமும் மாணவர்கள் 96.70 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.