தமிழ்நாடு செய்திகள்

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

Published On 2025-06-26 09:28 IST   |   Update On 2025-06-26 09:28:00 IST
  • மீன்பிடி வலைகள், தளவாடப் பொருட்கள் மற்றும் பிடித்த மீன்களை பறித்துச் சென்றுள்ளனர்.
  • படுகாயமடைந்த மீனவர்கள் ஒரத்தூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாகையை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செந்தில், சுரேஷ் ஆகிய இருவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி மீன்பிடி வலைகள், தளவாடப் பொருட்கள் மற்றும் பிடித்த மீன்களை பறித்துச் சென்றுள்ளனர்.

கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த மீனவர்கள் ஒரத்தூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Tags:    

Similar News