தமிழ்நாடு செய்திகள்
ஆரஞ்ச் அலர்ட்: நீலகிரியில் 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு
- நீலகிரியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
- நீலகிரிக்கு இன்றும், நாளையும் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்துக்கு இன்றும், நாளையும் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதேபோல், கோயம்புத்தூர், திருநெல்வேலி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மசாவட்டங்களுக்கும் இன்று கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டதை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் 4 தாலூக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூன் 14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுக்காக்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.