தமிழ்நாடு செய்திகள்
ஓபிஎஸ் ஆதரவாளரான மாநிலங்களவை எம்.பி. தர்மர் அதிமுகவில் இணைந்தார்!
- முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தி.மு.க.வில் இணைந்தார்
- ஓபிஎஸ் உடன் இருந்த 3 எம்.ஏ.க்களில் தற்போது ஐயப்பன் மட்டுமே அவருடன் உள்ளார்
சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அ.தி.மு.க. உட்கட்சி மோதலினால் பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக செயல்பட்ட பலரும் தற்போது திமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் ஆகியோரை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தி.மு.க.வில் இணைந்தார்
அவரைத்தொடர்ந்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஓபிஎஸ்-ன் ஆதரவாளருமான குன்னம் ராமச்சந்திரன் அரசியல் பொது வாழ்க்கையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மாநிலங்களவை உறுப்பினர் தர்மர், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஓபிஎஸ் உடன் இருந்த 3 எம்.ஏ.க்களில் தற்போது ஐயப்பன் மட்டுமே அவருடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.