தமிழ்நாடு செய்திகள்

SIR நடவடிக்கையால் ஒரு கோடி பேர் வாக்குரிமையை இழப்பர்- சீமான்

Published On 2025-11-17 15:51 IST   |   Update On 2025-11-17 15:51:00 IST
  • மத்திய அரசுக்கு எதிராகவும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் கோஷம் எழுப்பப்பட்டது.
  • எழும்பூரில் சாரல் மழை பெய்து வரும் நிலையில் நனைந்தபடி போராட்டம் நடத்தினர்.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி சென்னையில் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசுக்கு எதிராகவும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் கோஷம் எழுப்பப்பட்டது.

எழும்பூரில் சாரல் மழை பெய்து வரும் நிலையில் நனைந்தபடி போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது:-

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாக கொண்டு வருவது ஏன்?

திடீரென போலி வாக்காளர்களை கண்டு பிடித்தது போல பேசுவது ஏன்?

ஈரோடு இடைத்தேர்தலில் கள்ள ஓட்டு போட்டது தேர்தல் ஆணையத்திற்கு தெரியாதா?

ஒரே மாதத்தில் 6 கோடி வாக்காளர்களை எப்படி சரிபார்க்க முடியும். ஓராண்டு கால அவகாசம் எடுத்து எஸ்ஐஆர் பணிகளை செய்திருக்க வேண்டும்.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கான வாக்காளர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.

எங்களை போன்ற வளர்ந்து வரும் கட்சியினர் எஸ்ஐஆர்-ஐ எப்படி எதிர்கொள்ள முடியும்?

குறைந்தது ஒரு கோடி பேர் தங்களது வாக்குரிமையை இழப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News