தமிழ்நாடு செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார் ஓ.பன்னீர்செல்வம்
- உடல் நலன் சீரானதை தொடர்ந்து கடந்த 27-ந்தேதி அவர் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆனார்.
- அடையாரில் நடைபயிற்சி முதலமைச்சர் நடைபயிற்சி மேற்கொண்டபோது அவரை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து உள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 21-ந் தேதி காலை நடைபயிற்சியின்போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
முதலமைச்சருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு 'ஆஞ்சியோ' சிகிச்சையும் அளிக்கப்பட்டது. உடல் நலன் சீரானதை தொடர்ந்து கடந்த 27-ந்தேதி அவர் ஆஸ்பத்திரியில் இருந்து 'டிஸ்சார்ஜ்' ஆனார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று காலையில் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை அடையாரில் நடைபயிற்சி முதலமைச்சர் நடைபயிற்சி மேற்கொண்டபோது அவரை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து உள்ளார்.
முதலமைச்சரை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். சுமார் 2 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது.