தமிழ்நாடு செய்திகள்
அமித்ஷாவுடன் சந்திப்பா?: ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் - ஓ.பன்னீர்செல்வம்
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
- பிரேமலதா விஜயகாந்த், டி.டி.வி.தினகரன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலரை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.
சென்னை:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக நேற்று இரவு சென்னை வந்தார். அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள அமித்ஷா இன்று காலை 10 மணி முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார். குறிப்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல அமித்ஷா, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலரை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை வந்துள்ள அமித்ஷாவை சந்திக்க வாய்ப்புள்ளதா என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு "ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்" என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.