தமிழ்நாடு செய்திகள்

'உங்களுடன் ஸ்டாலின்' மனுக்கள் வைகை ஆற்றில் வீசப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்

Published On 2025-09-13 11:40 IST   |   Update On 2025-09-13 11:40:00 IST
  • திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் மனுக்கள் திருட்டு போனதாக புகார் கொடுத்திருந்தார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சுற்று வட்டார கிராமங்களில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தன. இந்த முகாம்களில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த மனுக்களை அதிகாரிகள் வாங்கி விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காக கொண்டு சென்றனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்தன. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக அப்போது இருந்த தாசில்தார், திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் மனுக்கள் திருட்டு போனதாக புகார் கொடுத்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று ஒருவரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரிடம் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News