தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் புதிய சுங்கச்சாவடி - கார், வேனுக்கு ரூ.105 கட்டணம் நிர்ணயம்

Published On 2025-06-07 11:22 IST   |   Update On 2025-06-07 11:22:00 IST
  • மானம்பாடி சுங்கச்சாவடி 12-ந்தேதி செயல்பாட்டுக்கு வரும்நிலையில் கட்டண விவரத்தையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
  • பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ரூ.560 ஆக கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி 12-ந்தேதி செயல்பாட்டுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

தஞ்சை-விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சேத்தியாத்தோப்பு-சோழபுரம் இடையே மானம்பாடியில் புதிய சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மானம்பாடி சுங்கச்சாவடி 12-ந்தேதி செயல்பாட்டுக்கு வரும்நிலையில் கட்டண விவரத்தையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

கார், வேன் உள்ளிட்டவற்றுக்கு ஒருமுறை செல்ல ரூ.105, இருமுறை அதே வழியில் பயணிக்க ரூ.160, வணிக வாகனங்களுக்கு ரூ.55 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இலகுரக வணிக வாகனம், சிறிய ரக சரக்கு வாகனம், மினி பஸ் ஒருமுறை செல்ல ரூ.170, இருமுறை பயணிக்க ரூ.255 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து, டிரக் - ரூ.360, பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ரூ.560 ஆக கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News