தமிழ்நாடு செய்திகள்
உதகை, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு
- உதகை மற்றும் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
- இ-பாஸ் நடைமுறையில் சில திருத்தங்களை சென்னை உயர்நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது.
உதகை மற்றும் கொடைக்கானல் மலை பிரதேசங்களுக்கு வாகன வரவை குறைக்கும் வகையில் இ-பாஸ் முறை நடைமுறையில் உள்ளது. இந்த இ-பாஸ் நடைமுறையில் சில திருத்தங்களை சென்னை உயர்நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது.
அதன்படி உதகை மற்றும் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் வார நாட்களில் 6000 வாகனங்கள், வார இறுதி நாட்களில் 8000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
கொடைக்கானலில் வார நாட்களில் 4000 வாகனங்கள், வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
உயர்நீதிமன்ற ஆணைப்படி, சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகங்கள் கட்டுப்பாடு விதித்துள்ளது.
மருத்துவ சேவை, சரக்கு வாகங்கள் மற்றும் உள்ளூர் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.