முருக பக்தர்கள் மாநாட்டில் கட்சி பேதமின்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் - நயினார் நாகேந்திரன்
- எடப்பாடி பழனிசாமிக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
- விரும்பும் தெய்வங்களை வழிபடுவது அவரவரின் ஜனநாயக உரிமை என்பதை எல்லோரும் உணர வேண்டும்.
விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை, அந்த அடிப்படையில் மதுரை பா.ஜ.க. முருக மாநாட்டுக்கு வாழ்த்துகள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முருக மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மதுரை மாநகரில் முருக பக்தர்கள் மாநாடு விமரிசையாக நடைபெற வாழ்த்து தெரிவித்துள்ள அஇஅதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எடப்பாடி பழனிசாமி அவர்கள் மிகச்சரியாக குறிப்பிட்டதைப் போல, விரும்பும் தெய்வங்களை வழிபடுவது அவரவரின் ஜனநாயக உரிமை என்பதை எல்லோரும் உணர வேண்டும். எனவே, கட்சி பேதமின்றி, ஆன்மீக நோக்கத்துடன் நாளை நடைபெற இருக்கும் இம்மாநாட்டில் உலகெங்கும் இருக்கும் முருக பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.