தமிழ்நாடு செய்திகள்

அஜித்குமார் வீட்டிற்கு நேரில் சென்று நயினார் நாகேந்திரன் ஆறுதல்

Published On 2025-07-04 16:44 IST   |   Update On 2025-07-04 16:44:00 IST
  • அஜித்குமார், காவல்துறையினர் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
  • வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார், காவல்துறையினர் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை எழுந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, அஜித்குமாரின் வீட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

இந்த நிலையில், திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் வீட்டிற்கு சென்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆறுதல் தெரிவித்தார்.

அஜித்குமாரின் தாய் மாலதி, தம்பி நவீனுக்கு நயினார் நாகேந்திரன் ஆறுதல் தெரிவித்தார்.

மேலும், போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் படத்திற்கு மாலை அணிவித்து நயினார் நாகேந்திரன் அஞ்சலி செலுத்தினார்.

Tags:    

Similar News