தமிழ்நாடு செய்திகள்

சுடலை மாடசுவாமி கோவில் மேல்கூரையை தனது சொந்த செலவில் அமைத்து கொடுத்த எம்.பி. விஜய் வசந்த்

Published On 2025-05-25 15:17 IST   |   Update On 2025-05-25 15:17:00 IST
  • ‘தினத்தந்தி' பாரம்பரிய நிகழ்ச்சிகளை முன்னெடுத்து மக்கள் விரும்பும் வண்ணம் நடத்தி வருகிறது.
  • முதலில் 8 வயது முதல் 14 வயது வரையிலான மாணவ- மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடந்தது.

அகஸ்தீஸ்வரம் தெற்குச் சாலையில் உள்ள அருள்மிகு சுடலை மாடசுவாமி கோவிலில் மேல்கூரை அமைக்க தர வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் சொந்த செலவில் 1 லட்சத்தில் மேல்கூரை அமைத்து கொடுத்து இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

முன்னதாக, 'தினத்தந்தி' நாளிதழ் வெற்றி நிச்சயம், கல்வி கண்காட்சி போன்ற மாணவ- மாணவிகள் பயன்பெறும் நிகழ்ச்சிகளை பல ஆண்டுகளாக நடத்தி வந்தது. தற்போது 'தினத்தந்தி' பாரம்பரிய நிகழ்ச்சிகளை முன்னெடுத்து மக்கள் விரும்பும் வண்ணம் நடத்தி வருகிறது.

அந்த வகையில் 'தினத்தந்தி'யின் நாகர்கோவில் பதிப்பு முதன்முறையாக 'கலை இலக்கியத் திருவிழா' என்ற நிகழ்ச்சியை நேற்று நடத்தியது. இந்த விழா நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள ஒய்.ஆர்.மகாலில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 'தினத்தந்தி'யுடன், வசந்த் அன்கோ நிறுவனமும் டைட்டில் ஸ்பான்சராக தன்னை இணைத்துக் கொண்டது.



இந்த விழா நேற்று பிற்பகலில் தொடங்கியது. முதலில் 8 வயது முதல் 14 வயது வரையிலான மாணவ- மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடந்தது. இதற்கிடையே விழா மேடையில் பரத நாட்டியம், பாரம்பரிய நடனம், மேற்கத்திய நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பார்வையாளர்கள் தரப்பிலும் பாடல்கள் பாடி அசத்தினர்.

ஓவியப்போட்டி நிறைவடைந்ததும் போட்டியின் நடுவர்களான பிரபா அகாடமி ஜான் பிரபாகரன், பைன் ஆர்ட்ஸ் அகாடமி அபினயா, ஆதிரா அகாடமி ஆதிரா, சாம் ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் நேச அருள், பகவதி ஆகியோர் சிறந்த ஓவியங்கள் வரைந்த மாணவ- மாணவிகளை தேர்வு செய்தனர். கலை இலக்கிய திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சி மாலையில் நடந்தது.

நிகழ்ச்சியை குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, தலைமை தாங்கி பேசினார். விழாவுக்கு வசந்த் அன்கோ நிறுவன நிர்வாக பங்குதாரரும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி.யுமான விஜய் வசந்த், ஆறுதெங்கன்விளை ஸ்டெல்லா மேரீஸ் கல்விக்குழும தலைவர் நசரேத் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார்கள். 

Tags:    

Similar News