தமிழ்நாடு செய்திகள்

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து எம்.பி. கல்யாண சுந்தரம் விடுவிப்பு

Published On 2025-07-14 13:14 IST   |   Update On 2025-07-14 13:14:00 IST
  • திமுக செயலாளராக எம்.எல்.ஏ. சாக்கோட்டை க.அன்பழகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக எம்.எல்.ஏ. சாக்கோட்டை க.அன்பழகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் சு.கல்யாணசுந்தரம், எம்.பி., அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக திரு. சாக்கோட்டை க.அன்பழகன், எம்.எல்.ஏ. (நாக்கியன் கோவில் மெயின் ரோடு, சாக்கோட்டை அஞ்சல், கும்பகோணம், தஞ்சை மாவட்டம்) அவர்கள் தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News