இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக நீலகிரியில் மினி டைடல் பார்க்- மு.க.ஸ்டாலின்
- இந்தியாவில் தமிழகம் மட்டும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.
- பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
ஊட்டி:
நீலகிரியில் இன்று 2-வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டார். ரூ.353 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மருத்துவ ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இதையடுத்து அரசு விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* உங்களுக்கு நன்மை செய்வதில் முதலாவது நபராக இருப்பவர்கள் நாங்கள் தான்.
* 2019-ம் ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்டபோது 2 நாட்கள் நான் இங்கேயே தங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணையாக இருந்தேன்.
* அன்றைய ஆட்சியாளர்கள் தூக்கத்தில் இருந்தபோது அவர்களை எழுப்பி நீலகிரிக்கு வர வைத்தது தி.மு.க.
* இந்தியாவில் தமிழகம் மட்டும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.
* பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் என மத்திய அரசே கூறி உள்ளது.
* தனித்துவமும் தலைமைத்துவமும் தான் திராவிட மாடல், அதனால் தான் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முதன்மையில் உள்ளது.
* உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்
* உதகை மருத்துவக்கல்லூரி கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டாலும் எந்த பணிகளும் நடக்கவில்லை.
* வாகனங்கள் செல்லாத இடங்களில் கூட மக்களை தேடி மருத்துவம் திட்டம் சென்றுள்ளது.
* வனவிலங்கு தாக்கி உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது.
* குன்னூர், கோத்தகிரியில் அதிநவீன வசதிகளுடன் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன.
* அழிவின் நிலையில் இருந்த வரையாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நிதி ஒதுக்கப்பட்டது.
* இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக நீலகிரியில் மினி டைடல் பார்க் வர உள்ளது.
* நீலகிரி மாவட்டம் கூடலூரில் 300 வீடுகள் கொண்ட கலைஞர் நகர் அமைக்கப்படும்.
* பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
* பழங்குடியின மக்களுக்கு 1,000 கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.