தமிழ்நாடு செய்திகள்

பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம்! - மு.க.ஸ்டாலின்

Published On 2025-09-20 07:31 IST   |   Update On 2025-09-20 07:31:00 IST
  • நம் தாய்மடி எனச் சொன்னோம்!
  • இரும்பின் தொன்மையை உலகுக்கு உணர்த்தினோம்!

மூவேந்தர் காலத்திலும், சங்க இலக்கியத்திலும், சங்ககாலத்திற்கும் பின்னான காப்பியங்களிலும் சிறப்பித்துக் கூறப்படும் மிகப்பெரும் கடல் வாணிபத் துறைமுகமாக இருந்த காவிரிப்பூம்பட்டினம் என்றழைக்கப்பட்ட இன்றைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள "பூம்புகாரில்" , பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து ஆராயும் பொருட்டு, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக பட்டினப்பாலையின் பாடல் வரிகளை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

நம் தாய்மடி எனச் சொன்னோம்!

இரும்பின் தொன்மையை உலகுக்கு உணர்த்தினோம்!

அடுத்து, "நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும்..." என நிறைந்து வளம்பெற்ற பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம்!!!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News