நெருக்கடிகளை தாண்டி சிறப்பான ஆட்சியை வழங்கி வரும் திராவிட மாடல் அரசு- மு.க.ஸ்டாலின்
- பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்டோர் சமத்துவம், சமூகநீதி உள்ளிட்ட உயர்ந்த கொள்கைக்காக பாடுபட்டனர்.
- மத்திய அரசு மாநில அரசுகளுடன் கருத்துக்கேட்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறது.
சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய-மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* எல்லோரும் சமம் என்ற சமத்துவத்தின் அடிப்படையில் கல்வி உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பெற வேண்டும் என்பதே சமூகநீதி.
* பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்; யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உலகளாவிய சிந்தனையை வலியுறுத்திய திருவள்ளுவர், கணியன் பூங்குன்றன் வாழ்ந்த மண் இது.
* பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்டோர் சமத்துவம், சமூகநீதி உள்ளிட்ட உயர்ந்த கொள்கைக்காக பாடுபட்டனர்.
* பெண்ணுரிமை, சுற்றுச்சூழல் உள்ளிட்டவற்றில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்.
* மத்திய அரசுக்கும் அதிக வருவாய் ஈட்டித்தரும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது, ஆனால் நமக்கான நிதிப்பகிர்வோ மிகவும் குறைவு.
* குறுகிய அரசியல் நோக்கத்துடன் தமிழ்நாட்டிற்கு குறைந்த அளவிலேயே நிதிப்பங்கீடு அளிக்கப்படுகிறது.
* மத்திய அரசு உரிய வரி பங்கை அளிக்காமல் குறுகிய மனதுடன் நடந்து வருகிறது.
* நான்கரை ஆண்டுகளாக பல நெருக்கடிகளை மீறி சிறப்பான ஆட்சியை திராவிட மாடல் அரசு வழங்கி வருகிறது.
* மத்திய அரசின் ஜனநாயக விரோத போக்கை காங்கிரஸ், வி.சி.க., இந்திய முஸ்லீம் லீக் கட்சிகளுடன் தி.மு.க.வும் சேர்ந்து கண்டித்தது.
* மத்திய அரசு மாநில அரசுகளுடன் கருத்துக்கேட்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.