தமிழ்நாடு செய்திகள்
முதலமைச்சர் தலைமையில் சட்டசபை தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம்
- திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.
- 234 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்ட பார்வையாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டசபை தொகுதிகளின் பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.
வரும் 2026 சட்டசபை தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக 234 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்ட பார்வையாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.