தமிழ்நாடு செய்திகள்

விமான நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்- அமைச்சர் சிவசங்கர்

Published On 2025-04-02 10:35 IST   |   Update On 2025-04-02 10:35:00 IST
  • புதுப்பட்டினம் கடற்கரைக்கு நாள்தோறும் 2,000 பேர் வருகை தருகின்றனர்.
  • இந்த ஆண்டு 11 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கான நிதியை வழங்க நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை :

தமிழக சட்டசபையின் இன்றைய அலுவல்கள் தொடங்கி உள்ளன. அப்போது உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

அப்போது அமைச்சர் கே.என்.நேரு பேசகையில், இந்த ஆண்டு 11 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கான நிதியை வழங்க நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் ஒன்றிய அரசும் 'ஜல் ஜீவன் திட்டம்' மூலம் கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கான நிதியை வழங்குகிறது என்றார்.

புதுப்பட்டினம் கடற்கரைக்கு நாள்தோறும் 2,000 பேர் வருகை தருகின்றனர். அதனால் அதனை சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திரன், சுற்றுலாத்துறை மூலம் ஆய்வு மேற்கொண்டு நிதி நிலைக்கு ஏற்ப கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார்.

இதனிடையே, பயணிகள் வசதிக்காக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். மழைக்காலங்களில் ஏர்போர்ட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் அனைத்து நாட்களிலும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார். 

Tags:    

Similar News