தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. மாநாட்டிற்கு இடையூறு? சில்லித்தனமான வேலைகளை தி.மு.க. செய்யாது- அமைச்சர் மூர்த்தி

Published On 2025-08-22 15:17 IST   |   Update On 2025-08-22 15:17:00 IST
  • எதிரிக்குக் கூட நாங்களோ முதலமைச்சரோ இடையூறு வேலைகளை பார்ப்பதில்லை.
  • யாரோ சொல்லச் சொல்லி த.வெ.க.வினர் சொல்கிறார்கள்.

மதுரையில் அமைச்சர் மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதிய பேருந்து நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. 25 வணிக வளாக கடைகள் அமைக்கப்பட்டு ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் இந்த பேருந்து நிலையம் அமைய பெற்றுள்ளது.

த.வெ.க. மாநாட்டுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தவில்லை. எதிரிக்குக் கூட நாங்களோ முதலமைச்சரோ இடையூறு வேலைகளை பார்ப்பதில்லை. இந்த சில்லித்தனமான வேலைகளை எந்த காலத்திலும் தி.மு.க. ஒருபோதும் செய்யாது. ஷேர் கொடுக்கக் கூடாது, வாய்க்கால் தோண்டுவது, இடையூறு செய்வது போன்ற பணிகளை தி.மு.க. தொண்டன் ஒருவன் கூட செய்ய மாட்டான். உண்மைக்கு மாறான செய்தியை சொல்லுகிறார்கள். யாரோ சொல்லச் சொல்லி த.வெ.க.வினர் சொல்கிறார்கள். தி.மு.க. இதுபோன்ற இடையூறுகளை ஒருபோதும் செய்யாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News