தமிழ்நாடு செய்திகள்

சட்டசபை மரபை காக்க வேண்டும், நையாண்டி செய்யக்கூடாது - அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்

Published On 2025-04-26 11:30 IST   |   Update On 2025-04-26 11:30:00 IST
  • உங்களுக்கு கை சரியான பின்னர் பேசுவதற்கு வாய்ப்பு தருகிறேன், அமருங்கள்.
  • யாருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்.

சட்டசபையில் வினாக்கள், விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

அப்போது, பேசுவதற்கு வாய்ப்பு தருமாறு கை தூக்கித் தூக்கி கை வலிக்கிறது என அரக்கோணம் எம்.எல்.ஏ. ரவி கூறினார்.

உங்களுக்கு கை சரியான பின்னர் பேசுவதற்கு வாய்ப்பு தருகிறேன், அமருங்கள் என எம்.எல்.ஏ. ரவிக்கு சபாநாயகர் அப்பாவு பதில் அளித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், உறுப்பினர்கள் அனைவரும் அவை மரபை காக்க வேண்டும், நையாண்டி செய்யக்கூடாது என அறிவுறுத்தினார்.

சபாநாயகர் அப்பாவு பேசுகையில், எம்.எல்.ஏ. ரவி 3 கேள்விகள் கேட்பதற்கு வாய்ப்பு தந்துள்ளேன். யாருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்.

எல்லோருக்கும் எல்லாம் கொடுக்க வேண்டும் என்பது தான் இந்த ஆட்சி. அதை கடைபிடித்து எல்லோருக்கும் எல்லாம் கொடுத்துக்கொண்டு இருக்கிறேன் என்று கூறினார்.

Tags:    

Similar News