தமிழ்நாடு செய்திகள்

நடுவானில் இயந்திரக் கோளாறு- சாதுர்யமாக செயல்பட்ட விமானி- உயிர் தப்பிய 162 பேர்: சென்னையில் பரபரப்பு

Published On 2025-01-17 20:15 IST   |   Update On 2025-01-17 20:15:00 IST
  • விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தல்படி விமானி விமானத்தை மீண்டும் சென்னையில் தரையிறக்கினார்.
  • மாலை 3.54 மணிக்கு புறப்பட்ட விமானம், மாலை 4.28 மணிக்கு மீண்டும் சென்னையிலேயே தரையிறங்கியது.

சென்னையில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்தி புறப்பட்ட விமானத்ம் நடுவானில் பறந்தபோது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.

இதனை சரியான நேரத்தில் கண்டறிந்த விமானி, விமானத்தை தொடர்ந்து இயக்குவது ஆபத்தானது என உணர்ந்து உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர், விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தல்படி விமானி விமானத்தை மீண்டும் சென்னையில் தரையிறக்கினார்.

மாலை 3.54 மணிக்கு புறப்பட்ட விமானம், மாலை 4.28 மணிக்கு மீண்டும் சென்னையிலேயே தரையிறங்கியது.

நடுவானில் விமானம் பறந்தபோது, விமானி சாதுர்யமாக செயல்பட்டதால், 162 பேர் உயிர் தப்பினர்.

சம்பந்தப்பட்ட விமானத்தில் 154 பயணிகள், 8 விமான ஊழியர்கள் உள்பட 162 பேர் இருந்தனர்.

Tags:    

Similar News