தமிழ்நாடு செய்திகள்

MBBS, BDS மருத்துவப்படிப்பு- விண்ணப்பங்களை திருத்தி சமர்ப்பிக்க கால அவகாசம்

Published On 2025-07-23 15:22 IST   |   Update On 2025-07-23 15:22:00 IST
  • சுமார் 1800 மாணவர்களின் விண்ணப்பத்தில் குறைபாடு உள்ளதாகக்கூறி நிராகரித்த நிலையில் மாணவி வழக்கு.
  • மாணவர்கள் முறையிட்டதால் நீட்டிக்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் MBBS, BDS மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை திருத்தி சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 1800 மாணவர்களின் விண்ணப்பத்தில் குறைபாடு உள்ளதாகக்கூறி நிராகரித்த நிலையில் மீண்டும் விண்ணப்பிக்க அவகாசம் கோரி மாணவி வழக்கு தொடரப்பட்டது.

அதன்படி இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்குனரகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18ம் தேதியுடன் கால அவகாசம் முடிந்த நிலையில் மாணவர்கள் முறையிட்டதால் நீட்டிக்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

அவகாசம் வழங்கப்பட்டதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் விளக்கம் அளித்ததை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Tags:    

Similar News