மணியகாரம்பாளையம், பூம்புகார் நகரில் நாளை மறுநாள் மின்தடை
- அன்னை அமிர்தானந்தா நகர், ராமலட்சுமி நகர், வள்ளி நகர், சிவா நகர் மற்றும் தட்சண் தோட்டம் பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
- நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
கோவை:
கோவை கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனையொட்டி இங்கிருந்து மின்வினியோகம் பெறும் நல்லாம்பாளையம் மின்பாதையில் உள்ள ஹவுசிங் யூனிட், ஏ.ஆர்.நகர், தாமரை நகர், ஓட்டுநர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர், தயாள் வீதி, தீயணைப்பு பகுதி, நல்லம்பாளையம் ரோடு, டி.வி.எஸ். ரோடு மற்றும் ஜெம் நகர், ஓம் நகர், அமிர்தா நகர், கணேஷ் லே-அவுட், சபரி கார்டன், ரங்கா லே அவுட், மணியகாரம்பாளையம் பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இதேபோல் சாய்பாபா காலனி மற்றும் இடையர்பாளையம் மின் பாதைக்கு உட்பட்ட இந்திரா நகர், காவேரி நகர், ஜீவா நகர், காமராஜவீதி, கே.கே.புதூர் 6-வது வீதி, ஸ்டேட் பாங்க் காலனி, கிருஷ்ணா நகர், கணபதி லே-அவுட், கே.ஜி. லே-அவுட், கிரிநகர், தேவி நகர், அம்மாசைக்கோனார் வீதி, கிருஷ்ணம்மாள் வீதி, என்.ஆர்.ஜி.வீதி, சின்னம்மாள் வீதி ஒரு பகுதி, பி.டி. காலனி, இ.பி.காலனி, பூம்புகார் நகர், டி.வி.எஸ்.நகர், அருண்நகர், அன்னை அமிர்தானந்தா நகர், ராமலட்சுமி நகர், வள்ளி நகர், சிவா நகர் மற்றும் தட்சண் தோட்டம் பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை செயற்பொறியாளர் பசுபதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.