தமிழ்நாடு செய்திகள்
தீபாவளியையொட்டி தமிழ்நாட்டில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை- முதலிடம் பிடித்த மதுரை
- கடந்த ஆண்டு தீபாவளியின் போது ரூ.438 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது.
- தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 18-ந் தேதி ரூ.230 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி அக்டோபர் 18-ந் தேதி ரூ.230 கோடி, 19-ந் தேதி ரூ.293 கோடி, 20-ந் தேதி ரூ.266 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் ரூ.170 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் சென்னை ரூ.158 கோடி, திருச்சி ரூ. 157 கோடி, சேலம் ரூ,153 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளியின் போது ரூ.438 கோடியாக இருந்த மது விற்பனை இந்த ஆண்டு ரூ.790 கோடியாக அதிகரித்துள்ளது.