தமிழ்நாடு செய்திகள்

மதராசி குடியிருப்பு விவகாரம்: டெல்லி முதல்வருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Published On 2025-06-13 16:57 IST   |   Update On 2025-06-13 16:57:00 IST
  • திட்டமிட்டபடி இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
  • குடியிருப்புவாசிகள் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

தெற்கு டெல்லியின் கல்காஜி விரிவாக்கத்தில் உள்ள பூமிஹீன் முகாமில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களும் மூன்று நாட்களுக்குள் தாமாக முன்வந்து காலி செய்ய வேண்டும் என்று டெல்லி மேம்பாட்டு ஆணையம் (DDA) அறிவித்திருந்தது.

கடந்த ஜூன் 8, 9 மற்றும் 10 ஆகிய மூன்று நாட்களுக்குள் குடியிருப்பாளர்கள் காலி செய்ய வேண்டும் என்றும், தவறினால் குடியிருப்புகளுக்குள் உள்ள பொருட்களுக்கு அரசு பொறுப்பேற்காது என்றும், திட்டமிட்டபடி இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

இதனால், டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் இந்த அறிவிப்பை அடுத்து, குடியிருப்புவாசிகள் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், டெல்லி மதராசி குடியிருப்பு இடிப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், "189 குடும்பங்களுக்கு நரேலாவில் வீடுகள் ஒதுக்கப்பட்டாலும் போதிய அடிப்படை வசதிகள் இல்லை" என முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags:    

Similar News