தமிழ்நாடு செய்திகள்

2 பகுதிகளில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

Published On 2025-06-17 09:01 IST   |   Update On 2025-06-17 09:01:00 IST
  • தென்மேற்கு வங்கதேசம் அதனை ஒட்டிய கங்கை நதி மேற்கு வங்கத்திலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
  • காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு நோக்கிர நகர வாய்ப்பு உள்ளது.

வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக கூடும். இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும். இதன்காரணமாக தமிழகத்தில் வரும் 22-ந்தேதி வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், இந்திய நிலப்பரப்பை ஒட்டிய 2 பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு குஜராத் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று வடக்கு, வடமேற்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.

மேலும் தென்மேற்கு வங்கதேசம் அதனை ஒட்டிய கங்கை நதி மேற்கு வங்கத்திலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு நோக்கிர நகர வாய்ப்பு உள்ளது. 

Tags:    

Similar News