தமிழ்நாடு செய்திகள்
லாக்-அப் டெத் விவகாரம்: மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட்
- 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- சிவகங்கை மாவட்ட எஸ்பி. ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.
நகை திருட்டு புகாரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. அஜித குமார் உயிரிழந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.