லைவ் அப்டேட்ஸ்: திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் - த.வெ.க. தலைவர் விஜய்
த.வெ.க மாநாட்டில், மதவாதத்திற்கு எதிரான கருத்துகளை விஜய் அழுத்தமாக தெரிவிப்பார் எனவும், அம்பேத்கர் கொள்கைகளையும் தொண்டர்களிடம் விஜய் எடுத்துக் கூறுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
த.வெ.க மாநாட்டில் பெரியார் கருத்துகளை முன்மொழியும் விதமாக பெண் விடுதலை, பெண்கள் அதிகாரத்திற்கு வரவேண்டியதன் அவசியம் குறித்து பேசுவார் எனத் தகவல்.
த.வெ.க மாநாட்டில் விஜய் உரையில் ஊழலுக்கு எதிராக நிறைய கருத்துகள் இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மாணவர்கள், இளைஞர்கள் பொது வாழ்க்கையில் இருக்க வேண்டிய அவசதியம், தேவை குறித்து பேச வாய்ப்பு.
மாநாட்டு திடலுக்கு விஜய் வருகை தந்துள்ளார். கேரவனில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
த.வெ.க மாநாட்டால் 10 முதல் 15 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இதனால், வி.சாலை பகுதியில் இருந்து முண்டியம்பாக்கம் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
த.வெ.க புதிய பயணம் வெற்றியடைய விஜய்க்கு கார்த்திக் சுப்புராஜ் வாழ்த்து தெரிவித்தார்.
த.வெ.க முதல் மாநில மாநாடு சிறக்க விஜய் மற்றும் தொண்டர்களுக்கு விஜய் சேதுபதி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
த.வெ.க மாநாடு நடப்பதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை இன்று திறக்க வேண்டாம் என்று நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
த.வெ.க முதல் மாநில மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் வெளியானது. அதன்படி, 2 மணிக்கு மேல் கலை நிகழ்ச்சி தொடங்குகிறது. 4 மணி முதல் 4.30 மணிக்குள் விஜய் கொடி ஏற்றுகிறார். 6 மணிக்கு விழா மேடையில் சிறப்புரை ஆற்றுகிறார்.
மாநாடு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போதே லட்சக்கணக்கான தொண்டர்கள் காத்திருக்கும் நிலையில், முன்கூட்டியே மாநாடு தொடங்க வாய்ப்பு.