தமிழ்நாடு செய்திகள்
லைவ் அப்டேட்ஸ்: திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் - த.வெ.க. தலைவர் விஜய்
2024-10-27 10:47 GMT
மாமன்னர்கள், மொழிப்போர் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் விஜய்
2024-10-27 10:44 GMT
அன்பு மிகுதியால் கட்சி தொண்டர்கள் தூக்கி வீசிய கொடியினை கழுத்தில் அணிந்து கொண்ட விஜய்
2024-10-27 10:24 GMT
41 கலைஞர்கள் சேர்ந்து பறையாட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்டவை த.வெ.க. மாநாட்டு மேடையில் இடம்பெறுகிறது. மேலும் கோவையை சேர்ந்த 27 பேர் அடங்கிய குழு வள்ளிக்கும்மி ஆட்டம் ஆடுகின்றனர்.
2024-10-27 09:57 GMT
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு தொடங்கியதை அடுத்து, தமிழ் நாட்டு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
2024-10-27 09:50 GMT
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் கலந்து கொள்ள த.வெ.க. தலைவர் விஜய்யின் பெற்றோர் மாநாட்டு திடலுக்கு வந்தனர்.
2024-10-27 09:46 GMT
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு, கட்சி பாடலோடு தொடங்கியது.