தமிழ்நாடு செய்திகள்

லைவ் அப்டேட்ஸ்: திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் - த.வெ.க. தலைவர் விஜய்

Published On 2024-10-27 12:04 IST   |   Update On 2024-10-27 18:57:00 IST
2024-10-27 08:46 GMT



2024-10-27 08:34 GMT

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு டிஜிட்டல் சான்றிதழ் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள கியூஆர் கோட் மூலம் ஸ்கேன் செய்து சான்றிதழைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


2024-10-27 08:25 GMT

த.வெ.க மாநாட்டு திடலில் 90 சதவீத இருக்கைகள் நிரம்பியுளளன. தொண்டர்கள் குவிந்ததை அடுத்து மாநாட்டு நிகழ்ச்சியை முன்கூட்டியே தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2024-10-27 08:18 GMT

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். "இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.

2024-10-27 08:08 GMT

த.வெ.க மாநாடு தொடங்குவதற்கு முன் தொண்டர்களை ஒழுங்குபடுத்துவது குறித்து மாவட்ட தலைவர்கள், பொறுப்பாளர்களுடன் த.வெ.க பொதுச் செயலாளர் ஆனந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.

2024-10-27 08:01 GMT

த.வெ.க மாநாட்டில் காவலர்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்துள்ளனர். கடும் வெயிலால் மயக்கம், தலை சுற்றல் போன்றவற்றால் தொண்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மயக்கமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர்.

2024-10-27 07:53 GMT

திருச்சியில் இருந்து த.வெ.க. மாநாட்டிற்கு வந்த தொண்டர்களின் கார் உளுந்தூர்பேட்டை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், திருச்சியை சேர்ந்த 35 வயதான கலை என்பவர் உள்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2024-10-27 07:45 GMT

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு இயக்குநர் சீனு ராமசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

2024-10-27 07:42 GMT

"ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். த.வெ.க. தலைவர் விஜய்க்கு, எனது தந்தை ஆசியும் எனது ஆதரவும் உண்டு" என்று கூறி த.வெ.க தலைவர் விஜய்க்கு, நடிகர் பிரபு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2024-10-27 07:35 GMT

த.வெ.க மாநாட்டில், தனிமனித உரிமையின் முக்கியத்துவம், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை, அவர்களின் மேம்பாடு ஆகிய கருத்துகள் இடம்பெறவும் வாய்ப்புள்ளதாக தகவல்.

Tags:    

Similar News