தமிழ்நாடு செய்திகள்
விமானம் தரையிறங்கும்போது அடிக்கப்பட்ட லேசர் ஒளி.. சென்னை விமான நிலையத்தில் தொடரும் சம்பவங்கள்
- கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் 288 விமானம் தரையிறங்க இருந்தது.
- இந்த விவகாரம் குறித்து விமானி புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் மீது மர்ம நபர்கள் லேசர் ஒளி அடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. 4வது முறையாக இன்று தரையிறங்கயிருந்த விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் 288 விமானம் தரையிறங்கும் தருவாயில் அதன் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டுள்ளது.
லேசர் ஒளி மறைந்த பிறகு விமானி விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார். இதன் பின் இந்த விவகாரம் குறித்து விமானி புகார் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற தொடர்ச்சியான சம்பவங்கள் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த செயலில் ஈடுபடுபவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.