தமிழ்நாடு செய்திகள்
திம்பம் மலைப் பாதையில் மண் சரிவு: தமிழ்நாடு - கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிப்பு
- திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது.
- திம்பம் மலைப்பாதையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலில் இருந்து சத்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலை தொடங்குகிறது.
திம்பம் மலைப்பகுதி தமிழகம் - கர்நாடகாவை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது.
அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து திம்பம் மலைப்பாதையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் கனமழை காரணமாக திம்பம் மலைப்பாதையில் உள்ள 7, 8, 20, 27 கொண்டை ஊசி வளைவுகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு - கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.